தள்ளாடும் தலைநகர் டெல்லி... குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரிப்பு!

மது அருந்தி வாகனம் ஓட்டுகிறார்களா என பரிசோதனை
மது அருந்தி வாகனம் ஓட்டுகிறார்களா என பரிசோதனை

டெல்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகன சோதனையில் போலீஸார்
வாகன சோதனையில் போலீஸார்

டெல்லியில் கடந்த ஜனவரி 1 முதல் மார்ச் 31-ம் தேதி வரை போலீஸார் நடத்திய வாகன சோதனைகளில் 6,591 பேர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியது கண்டறியப்பட்டுள்து. இந்த விதிமீறலானது, கடந்த 2023-ம் ஆண்டில் 5,384 என்ற எண்ணிக்கையிலும் 2022ம் ஆண்டில் 399 என்ற எண்ணிக்கையாகவும் இருந்தது. இந்நிலையில் தற்போது குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அதிகமாக உள்ள பகுதியில் மேற்கு டெல்லியின் ரஜவுரி கார்டன் முதலிடத்தில் உள்ளது. அப்பகுதியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 333 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சமய்பூர் பத்லி, 252 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

வாகன ஓட்டியிடம் பரிசோதனை
வாகன ஓட்டியிடம் பரிசோதனை

குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கவலையளிப்பதாக சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள் தெரிவித்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் பிரின்ஸ் சிங்கால் என்பவர் இதுகுறித்து கூறுகையில், "மது விற்பனை அதிகரித்து வருவதால், குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 22 சதவீதம் என்பது ஒரு மோசமான அதிகரிப்பு. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது ஒரு அன்றாட நிகழ்வாகிவிட்டது. இதை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 185ன் படி, 100 மில்லி ரத்தத்தில் 30 கிராமுக்கு மேல் மதுபான தன்மை கலந்திருக்கும் நபர் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால், அவருக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் நடிகை காஜலுக்கு திடீர் மாரடைப்பு... மருத்துவமனையில் அனுமதி!

காதலனை நம்பி சென்ற கல்லூரி மாணவி கொலை... பணத்திற்காக நடந்த கொடூரம்!

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு... இடைத் தேர்தல் எப்போது?

ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த நபர் உயிருக்குப் போராட்டம்!

கையில் சூலம்... காலில் சலங்கை... மிரட்டும் அல்லு அர்ஜூன்... தெறிக்குது ’புஷ்பா2’ டீசர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in