திருமணமான பெண்ணுடன் நள்ளிரவில் சிக்கிய வாலிபர்: மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்!

தாக்குதல்
தாக்குதல்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருமணமான பெண்ணுடன் தொடர்பில் இருந்த வாலிபரை கிராமத்தினர் மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தை மீறிய உறவு
திருமணத்தை மீறிய உறவு

ஜார்க்கண்ட் மாநிலம் கிரித் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே கணவன் வெளிநாட்டிற்கு சென்றதால், கான்புராவில் உள்ள கிராமத்திற்கு அவரது மனைவி சென்றுள்ளார்.

இந்த நிலையில் இவருக்கும், குத்ரியாபாத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் நெருங்கி பழகியுடன் அடிக்கடி இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தனர்.

தாக்குதல்
தாக்குதல்

இந்த நிலையில், அந்த வாலிபர் நள்ளிரவு தனது காதலியுடன் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். இதனால் கிராம மக்கள் திரண்டு சம்பந்தப்பட்ட இளம்பெண்ணின் வீட்டைக் கதவைத் தட்டினர். அப்போது வாலிபரும், இளம்பெண்ணும் கையும், களவுமாக சிக்கிக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அந்த வாலிபரை மரத்தில் கயிற்றால் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

இந்த தகவல் கிடைத்த போலீஸார் விரைந்து சென்று வாலிபரை மீட்டனர். இதன் பின் அந்த இளம்பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். ஆனால், இளம்பெண் இதுவரை எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை.

இந்த நிலையில் பஞ்சாயத்து கூடியது. இளம்பெண்ணையும், வாலிபரையும் ஆட்சேபனைக்குரிய சூழ்நிலையில் பிடித்ததால் அவர்களுக்கு திருமணம் செய்ய பஞ்சாயத்து முடிவு செய்தது. இதற்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் சம்மதித்த நிலையில், வாலிபரின் குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இந்த நிலையில், இந்த விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in