நெருங்கும் இரண்டாம் கட்டத் தேர்தல்... 3 இடங்களில் குண்டுவெடிப்பால் மணிப்பூரில் பதற்றம்!

மணிப்பூரில் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு
மணிப்பூரில் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு

இரண்டாம் கட்டத் தேர்தல் நெருங்கும் நிலையில் மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் இன்னர் மணிப்பூர், அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 19-ம் தேதி நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூரில் சில பகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் எஞ்சியுள்ள சில பகுதிகளுக்கு வரும் 26-ம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் அங்குள்ள காங்போக்பி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 3 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இம்பாலை, நாகாலாந்தின் திமாப்பூருடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 2-ல் உள்ள சபர்மீனா அருகே இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் ஒரு பாலம் சேதப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை என்றும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வன்முறை சம்பவம் நிகழ்ந்த பகுதிகள் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், அப்பகுதியில் உள்ள மற்ற பாலங்களில் வெடிகுண்டு சோதனை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப் படையினர்
பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப் படையினர்

மணிப்பூரில் முதல்கட்ட வாக்குப்பதிவின் போது வன்முறை வெடித்து, அங்கு சில வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in