ராகிங் கொடுமை! முதுகு, கை, கால்களில் கொடூர காயம்... கண்கலங்க வைக்கும் புகைப்படம்!

பாதிக்கப்பட்ட மாணவன்
பாதிக்கப்பட்ட மாணவன்

கோவையில் சீனியர் மாணவர்களால் கல்லூரி மாணவர் ஒருவர் கொடூரமாக ராகிங் செய்யப்பட்டதோடு, தற்போது புகைப்படம் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவரை கடந்த 6ம்தேதி இரவு சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். அப்போது, முதலாம் ஆண்டு மாணவனை சீனியர் மாணவர்கள் கடுமையாக தாக்கியதோடு, மொட்டை அடித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, கோவை பீளமேடு காவல்துறையில் மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் கல்லூரியில் படித்து வந்த சீனியர் மாணவர்கள் மணி, மாதவன், வெங்கடேஷ், தரணிதரன், யாலிஸ், ஐயப்பன், சந்தோஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே, மாணவர்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தநிலையில், ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவனின் 13 நிமிட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல், கை, கால்களில் மாணவன் கடுமையாக தாக்கப்பட்ட காயங்கள் இருக்கிறது. பிரம்பால் மாணவனை சீனியர் மாணவர்கள் தாக்கியதால் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த புகைப்படம் வெளியாகி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in