அதிர்ச்சி... நாகையில் 300 கிலோ கஞ்சாவை பறிமுதல்!

நாகையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்
நாகையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள போலீஸார் 8 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கஞ்சாவை கடத்துவதாக நாகப்பட்டினம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் கீழையூர் அருகே போலீஸார், நேற்று முன் தினம் இரவு, தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த 2 கார்களை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் மூட்டை மூட்டையாக, தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இலங்கைக்கு கஞ்சாவை கடத்த முயன்ற 8 பேர் கைது
இலங்கைக்கு கஞ்சாவை கடத்த முயன்ற 8 பேர் கைது

உடனடியாக கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், கார்களில் வந்த 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸாரின் விசாரணையில் ஆந்திரா-ஒடிசா எல்லைப் பகுதியில் இருந்து கஞ்சாவை கடத்தி, தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து, இங்கிருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா மற்றும் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கார்கள், 3 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

2 மாதங்களில் 600 கிலோ கஞ்சா பறிமுதல்
2 மாதங்களில் 600 கிலோ கஞ்சா பறிமுதல்

கடந்த செப்டம்பர் மாதம் இதே போல் இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன்படி கடந்த 2 மாதத்தில் மட்டும் நாகப்பட்டினம் போலீஸார், 600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்!  முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!

ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி

தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in