ஆரூத்ரா நிதிமோசடி வழக்கு... சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆருத்ரா
ஆருத்ரா

ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குநர் சசிகுமார் ஜாமின் கோரிய மனு குறித்து சிபிசிஐடி பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரத்தில் ரூ.2,438 கோடி மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் 25வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குநர் சசிகுமார் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ஆரூத்ரா நிறுவனத்தில் அலுவலக பணியாளராக இணைந்து, கிளைக்கு வருபவர்களிடம் இருந்து பணத்தை வாங்கும் பணியில் மட்டுமே தான் ஈடுப்பட்டதாக கூறியுள்ளார்.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு அளித்து வந்த நிலையில், திடீரென கைது செய்யப்பட்டதாகவும், இருநூறு நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் தனக்கு ஜாமின் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது போது கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்ப ராஜ் ஆஜராகி, பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் வாசிக்கலாமே...

“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in