தடை செய்யப்பட்ட தடுப்பணையில் மீண்டும் சோகம்... சட்டக்கல்லூரி மாணவர் பரிதாப மரணம்

உயிரிழந்த சட்டக்கல்லூரி மாணவர் அபிநந்த்
உயிரிழந்த சட்டக்கல்லூரி மாணவர் அபிநந்த்

பொள்ளாச்சி அருகே தடை செய்யப்பட்ட அணைக்கட்டில் குளிக்கச் சென்ற சட்டக் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் படை எடுக்க துவங்கியுள்ளனர். குறிப்பாக ஆழியாறு அணை மற்றும் பூங்கா பகுதிகளுக்கு தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதில் சிலர் தடை செய்யப்பட்ட வனப்பகுதி மற்றும் அணைக்கட்டு பகுதிகளுக்கு செல்வதால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகள்
தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகள்

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே உள்ள பள்ளிவளங்கால் அணைக்கட்டுப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், ’பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதி’ என எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுற்றுலா பயணிகள் பலரும் இதனை கண்டு கொள்ளாமல் இங்கு சென்று குளித்து வருகின்றனர்.

ஆற்றில் அவ்வப்போது சுழல் ஏற்படுவதோடு, புதைமணலும் இருப்பதால் அடிக்கடி இங்கு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதுவரை இந்த பகுதியில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எச்சரிக்கை பகுதி
எச்சரிக்கை பகுதி

இந்த நிலையில் கோவை சட்டக் கல்லூரியில் 3ம் ஆண்டு பயின்று வரும் ஈரோட்டைச் சேர்ந்த 21 வயது மாணவரான அபிநந்த், தனது நண்பர்களுடன் இன்று பள்ளிவளங்கால் அணைக்கட்டுப் பகுதிக்கு சுற்றுலாவிற்கு வருகை தந்துள்ளார். அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அபிநந்த் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. அருகில் இருந்து அவரது நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்ற போதும் முடியவில்லை.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸாரும், தீயணைப்பு படையினரும், வருவாய் துறையினரும் மாணவர் அபிநந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால், இந்த பகுதிக்கு யாரும் வராத வகையில் தடுப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in