லஸ்கர் பயங்கரவாதிகளால் கிராமவாசி கொலை: 67 பேரை பிடித்து போலீஸ் விசாரணை

ரஜவுரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர்
ரஜவுரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ராணுவத்தினர்

ஜம்மு - காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) பயங்கரவாதிகளால் கிராமவாசி கொல்லப்பட்டது தொடர்பாக சந்தேகத்திற்குரிய 67 பேரை பிடித்து மாநில போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜவுரி மாவட்டம், தனமண்டி அருகே குந்தா மேல் கிராமத்தில் முகமது ரசாக் (40) என்பவர் கடந்த 22ம் தேதி, எல்இடி-ஐ சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். முகமது ரசாக் அரசின் சமூக நலத்துறையில் பணிபுரிந்து வந்தார். இவரது சகோதரர் முகமது தாஹிர் சவுத்ரி, பிராந்திய ராணுவத்தில் சிப்பாயாக உள்ளார். பயங்கரவாதிகள் தாக்குதலில் முகமது தாஹிர் சவுத்ரி காயமின்றி தப்பினார்.

ஜம்மு - காஷ்மீர் ரஜவுரி மாவட்டம்
ஜம்மு - காஷ்மீர் ரஜவுரி மாவட்டம்

இந்நிலையில் அம்மாநில போலீஸ் விசாரணையின் இந்த செயலில் ஈடுபட்ட இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவனான, அபுஹம்சா என்பவனை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். மேலும், அவனது புகைப்படங்களை வெளியிட்ட போலீஸார், அபுஹம்சா குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்குவதாகஅறிவித்துள்ளனர்.

இதற்கிடையே இந்த கொலை சம்பவம் குறித்து தனமண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்குப் பிறகு இதுவரை சந்தேகத்தின் பேரில் 67 பேரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் விசாரணை (கோப்பு படம்)
போலீஸ் விசாரணை (கோப்பு படம்)

எல்லை மாவட்டங்களான ரஜவுரி, பூஞ்ச் பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் பணியில் பாதுகாப்புப் படையினருடன் போலீஸார் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். ஜம்மு மண்டல கூடுதல் காவல் துறை இயக்குனர் ஜெனரல் ஆனந்த் ஜெயின், ரஜவுரியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையும் வாசிக்கலாமே...

“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in