காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சார வாகனத்தில் பெட்டி, பெட்டியாக மதுபானம்: ம.பி போலீஸார் அதிர்ச்சி!

காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சார வாகனத்தில் சிக்கிய மதுபாட்டில்கள்
காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சார வாகனத்தில் சிக்கிய மதுபாட்டில்கள்

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளரின் பிரச்சார வாகனத்தில் இருந்து பெட்டி, பெட்டியாக மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டிசம்பர் 3-ம் தேதி, வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இதையொட்டி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்குகின்றனரா என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

காண்ட்வாணி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உமங் சிங்கார்
காண்ட்வாணி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உமங் சிங்கார்

இந்நிலையில் கண்ட்வாணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உமங் சிங்கார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள பிரச்சார வாகனத்தில், மது பாட்டில்கள் கடத்தி செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வாகனத்தை மடக்கி போலீஸார் சோதனை செய்த போது, அதில் பெட்டி பெட்டியாக மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

எம்.எல்.ஏவாக உள்ள உமங் சிங்கார் உட்பட மூவர் மீது போலீஸார் வழக்கு
எம்.எல்.ஏவாக உள்ள உமங் சிங்கார் உட்பட மூவர் மீது போலீஸார் வழக்கு

இதையடுத்து 26 பெட்டிகளில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார், அந்த வாகனத்தின் ஓட்டுநர் சீதாராம் கேசரியா மற்றும் சச்சின் முலேவா ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளர் உமங் சிங்கார் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

பிரச்சாரத்திற்காக அனுமதி பெற்ற வாகனத்தில் மதுபானங்கள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் சட்ட விரோதமாக தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த மதுபான வகைகள் கொண்டுவரப்பட்டு இருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in