'மஞ்சுமெல் பாய்ஸ்' படத் தயாரிப்பாளருக்கு வந்த சோதனை... வங்கிக் கணக்குகள் முடக்கம்!

 'மஞ்சும்மல் பாய்ஸ்'
'மஞ்சும்மல் பாய்ஸ்'

மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத் தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்குகளை முடக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான காரணமும் தெரிய வந்துள்ளது.

கொடைக்கானலில் உள்ள குணா குகைக்கு விசிட் அடிக்கும் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவர் தவறுதலாக அந்த குகையில் சிக்கிக் கொள்கிறார். அவரை நண்பர்கள் எப்படி மீட்கிறார்கள் என்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவானதுதான் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம். கேரளா மட்டுமல்லாது தமிழகத்திலும் இந்தப் படம் ஹிட்டானது.

மஞ்சுமெல் பாய்ஸ்
மஞ்சுமெல் பாய்ஸ்

இந்த நிலையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், விக்ரம் உள்ளிட்டப் பல பிரபலங்களும் இப்படத்தின் படக்குழுவினரை அழைத்துப் பாராட்டினார்கள். இந்நிலையில், அரூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் 'மஞ்சுமெல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கணக்குகளை முடக்க வங்கிக்கு எர்ணாகுளத்தில் உள்ள சார்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மஞ்சுமெல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் பரவா பிலிம்ஸ் மற்றும் பங்குதாரர் ஷான் ஆண்டனி ஆகியோர் படம் வெளியான பிறகு தங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் 40 சதவீத பங்களிப்பை கொடுப்பதாக, மனுதாரர் சிராஜ் வலியதாராவிடம் சொல்லி இருக்கின்றனர். ஆனால், சொன்னவாறு நடந்து கொள்ளாமல் பின் வாங்கி இருக்கின்றனர்.

‘மஞ்சுமெல் பாய்’
‘மஞ்சுமெல் பாய்’

இதனையடுத்து படத்தின் தயாரிப்பாளர் சிராஜ் வலியதாரா, நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனால், கூடுதல் துணை நீதிபதி சுனில் வர்கி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். சிராஜ் இந்தப் படத்தில் சுமார் 7 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் கிட்டத்தட்ட ரூ. 200 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...   


‘தலித் அரசியல் ரஜினிக்கு தெரியுமா?’ ரசிகர்கள் ஆவேசம்!

‘வேண்டாம்... கைவிடுங்க...’ ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

மீனவர்களில் வங்கிக் கணக்கில் ரூ.5,000... தடைக்காலம் தொடங்கும் நிலையில் நிவாரணம்!

திருமண நாளைக் கொண்டாடி விட்டு, நள்ளிரவில் தூக்கில் தொங்கிய 6 மாத கர்ப்பிணி!

சர்ச்சை வீடியோ: ஹெல்மெட் போடலை... நம்பர் பிளேட் கிடையாது... ராதிகாவுடன் பைக்கில் பறந்த சரத்குமார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in