
தீபாவளி பண்டிகையை ஒட்டி ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், படக்குழு திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகமாக ‘ஜிகர்தண்டா-டபுள் எக்ஸ்’ இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இதில் ராகவா லாரன்ஸ்-எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்கள்.
முதல் பாகத்தை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பீரியட் டிராமாவாக உருவாகியுள்ள இந்தப் படம் நாளை வெளியாக இருக்கிறது. படத்தின் வெற்றிக்காக இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ் என படக்குழுவினர் அனைவரும் திருப்பதியில் சுவாமி தரிசனம் மேற்கொண்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
படம் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்! முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!
ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!
மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்
பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!