அவரால் நான் ஏமாற்றப்பட்டேன்... நடிகை வித்யா பாலன் பரபரப்பு பேட்டி!

நடிகை வித்யா பாலன்
நடிகை வித்யா பாலன்
Updated on
2 min read

காதலர் தினத்தில் காதலருடன் நேரம் செலவிட வேண்டும் என நினைத்தபோது முன்னாள் காதலியுடன் டேட்டிங் போவதாகச் சொல்லி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நடிகை வித்யாபாலனின் முன்னாள் காதலர். இந்த கசப்பான அனுபவத்தை வித்யாபாலன் பகிர்ந்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யாபாலன். படங்களில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் பொதுவில் பல கருத்துகளை தைரியமாக முன்வைப்பவர். குறிப்பாக, நடிகை என்றால் உடல் மெலிந்து சிவப்பாக இருக்க வேண்டும் என்ற பிம்பம் மீது தன்னுடைய கடுமையான விமர்சனங்களை வைத்தவர். இப்படியான சூழலில், தன்னுடைய முதல் காதல் பற்றியும் அதில் தனக்குக் கிடைத்த மோசமான அனுபவம் குறித்தும் பேசியிருக்கிறார்.

நடிகை வித்யாபாலன்
நடிகை வித்யாபாலன்

இதுதொடர்பாக அவர் பேசுகையில், “எல்லோருக்கும் முதல் காதல் மறக்க முடியாத சில நல்ல அனுபவங்களைக் கொடுத்திருக்கும். ஆனால், எனக்கு அது கசப்பான நினைவுகளைத் தான் கொடுத்திருக்கிறது. நான் கல்லூரியில் படிக்கும்போது ஒருவரைக் காதலித்தேன்.

அவரால் நான் ஏமாற்றப்பட்டேன். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவரால் என் இதயம் நொறுங்கி விட்டது. காதலர் தினத்தன்று எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கல்லூரிப் பெண்ணான நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், அன்று என்னிடம் வந்து, ‘நான் இன்று என் முன்னாள் காதலியுடன் டேட்டிங் செல்ல இருக்கிறேன்’ என்று சொன்னார்.

நடிகை வித்யாபாலன்
நடிகை வித்யாபாலன்

நினைத்துப் பாருங்கள்! அப்போது என் மனது என்ன பாடு பட்டிருக்கும்? அதோடு என் வாழ்க்கையில் அவர் தேவை இல்லை என்று முடிவு செய்துவிட்டேன். அந்த உறவில் இருந்தும் வெளியே வந்து விட்டேன். ஆனால், அதன் பிறகு எனக்கு இப்போது மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக் கிடைத்திருக்கிறது” என்று கூறியுள்ளார் வித்யாபாலன்.

இதையும் வாசிக்கலாமே...   


‘தலித் அரசியல் ரஜினிக்கு தெரியுமா?’ ரசிகர்கள் ஆவேசம்!

‘வேண்டாம்... கைவிடுங்க...’ ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

மீனவர்களில் வங்கிக் கணக்கில் ரூ.5,000... தடைக்காலம் தொடங்கும் நிலையில் நிவாரணம்!

திருமண நாளைக் கொண்டாடி விட்டு, நள்ளிரவில் தூக்கில் தொங்கிய 6 மாத கர்ப்பிணி!

சர்ச்சை வீடியோ: ஹெல்மெட் போடலை... நம்பர் பிளேட் கிடையாது... ராதிகாவுடன் பைக்கில் பறந்த சரத்குமார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in