24 வருடங்கள்... திருமண நாளில் ஷாலினி நெகிழ்ச்சி!

அஜித் - ஷாலினி
அஜித் - ஷாலினி
Updated on
1 min read

திருமணம் ஆகி 24 ஆண்டுகள் ஆகிவிட்டது என அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நெகிழ்ந்திருக்கிறார் நடிகை ஷாலினி. புகைப்படத்தில் இருவரின் அன்பையும் பார்த்த ரசிகர்கள் திருமண நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்கள் அஜித்- ஷாலினி இருவரும் தங்களது 24-ம் ஆண்டு திருமண நாளை இன்று கொண்டாடி வருகின்றனர். இதற்காக காலை முதலே இணையத்தில் ரசிகர்கள் இந்த ஜோடிக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அஜித்- ஷாலினி இருவரும் திருமண நாளைக் கொண்டாட வந்திருந்தபோது அங்கிருந்த ரசிகர்கள் அவர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

இந்தப் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, வெளிநாட்டில் அஜித்துடன் இருக்கும் கியூட்டான புகைப்படம் ஒன்றை ஷாலினி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திருமணம் ஆகி 24 வருடங்கள் ஆகிவிட்டது என நட்சத்திரங்கள், ஹார்டின் எமோஜியோடு நெகிழ்ந்துள்ளார்.

திருமணம் ஆகி 24 வருடங்கள் ஆனாலும் இன்னும் காதல் குறையாது இருக்கும் அஜித்- ஷாலினி தம்பதியின் இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அவர்களுக்குத் திருமண நாள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

ரசிகர்களுடன் அஜித்- ஷாலினி
ரசிகர்களுடன் அஜித்- ஷாலினி

அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் தனது நடனம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த தெலுங்கு நடிகை ஸ்ரீலீலாவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in