தாமரையை தின்னாச்சி, இரட்டை இலையை மென்னாச்சு... அடுக்கு மொழியில் மன்சூர் அலிகான் அலப்பறை!

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

மக்களவைத் தேர்தலில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் சார்பில் சுயேட்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகான் இன்று வேலூர் மண்டி தெரு பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில் தனது பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அந்த பகுதியில் இருந்த அனைத்து கடைகளுக்கும் சென்று வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.

மேலும் இருசக்கர வாகனத்தை இயக்கியவாறு அனைத்து பகுதிகளுக்கும் சென்று வெற்றி சின்னமான பலாப்பழ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டார் மேலும் பூக்கடையில் இருந்த தாமரை பூவையும், துளசி இலையையும் வாங்கி வாயில் போட்டுக்கொண்டு, “தாமரையை தின்னாச்சி, இரட்டை இலையை மென்னாச்சு பலாப்பழம் ஜெயிச்சாச்சு” என்று கூறினார்.

பின்னர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், "வேலூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக நான் தனியாகத்தான் வேட்பு மனுவை தாக்கல் செய்தேன். பின்பு என்னிடம் சில பேர் ஆதரவு கொடுப்பதாக கூறினார்கள். பின்பு அனைத்து இடங்களிலும் திமுகவை குறித்து அவதூறாக பேசி வந்தனர். ஆனால், அதிமுக பற்றி அவர்கள் எதுவும் பேசவில்லை. பின்பு இது குறித்து விசாரித்த போது தான் தெரிகிறது அதிமுக இவர்களை விலைக்கு வாங்கிக்கொண்டு என்னிடம் அனுப்பி வைத்திருப்பது” என்றார்.

மேலும், “இது போன்ற துரோகம் நடந்ததால் எனக்கு யாரும் வேண்டாம். நான் மக்களுடன் கூட்டணி எனக்கு மக்கள் இருக்கிறார்கள் நான் மக்களுடன் இணைந்து வேலூர் பகுதியில் போட்டியிடுகிறேன் என்னை மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகளை நான் வரவேற்கிறேன். அருணாச்சல பிரதேசத்தை சீனா பாதி ஆக்கிரமித்து விட்டார்கள், ஆனால் கோழை பிரதமர் இதுபற்றி வாயை திறக்க முன்வரவில்லை. தமிழகத்திற்கு மோடி வருவதே நான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதால்தான்” என்று பேசி அதிரடி காட்டினார்.

இதையும் வாசிக்கலாமே...   

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவு... தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வங்கிக் கணக்கு முடக்கம்... வருமான வரித்துறையின் அடுத்த அதிரடி!

கோவையில் ரூ.3.54 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்... தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது!

கிளம்பிட்டாரு நவரச நாயகன் கார்த்திக்... அதிமுகவுக்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் பிரச்சாரமாம்!

11 வயதில் வீட்டை விட்டு அனுப்பி வைத்தார்கள்...மனம் உடைந்த பிரபல நடிகர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in