சேனாபதி ஈஸ் பேக்... ஜூனில் வெளியாகும் 'இந்தியன்2'!

சேனாபதி ஈஸ் பேக்... ஜூனில் வெளியாகும் 'இந்தியன்2'!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன்2’ படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் அதிகம் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் படங்களில் ஒன்றாக இருக்கிறது ‘இந்தியன்2’. ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் இதில் நடித்திருக்கின்றனர். முன்பு வெளியான ’இந்தியன்’ படத்தில் ஊழலுக்கு எதிரான அப்பா மற்றும் ஊழல் செய்யும் மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடித்தார் கமல்ஹாசன். இந்நிலையில் ’இந்தியன் 2’ படத்தில் சேனாபதி கதாபாத்திரத்தில் மட்டுமே அவர் நடித்திருக்கிறார் என்பது இதுவரை வெளியான பட அப்டேட்களில் இருந்து தெரிகிறது.

மகன் கதாபாத்திரமான (சந்துரு) இன்னொரு கமலை படக்குழு சர்ப்ரைஸாக வைத்திருக்கிறதா என்பது தெரியவில்லை. இப்படியான சூழ்நிலையில்தான் 'ஊழல் நாட்டின் கேன்சர்’ என்ற போஸ்டரோடு இன்று மாலை படத்தின் முக்கிய அப்டேட் தர இருக்கிறோம் என படக்குழு அறிவித்து இருந்தது.

 ’இந்தியன்2’
’இந்தியன்2’

அதாவது, சேனாதிபதி கம்பேக் எனச் சொல்லி, 'இந்தியன்2' திரைப்படம் ஜூனில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதை படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், என்ன தேதி என்பதைக் குறிப்பிடவில்லை.

’இந்தியன்2’ உருவாகும் கையோடு அதன் மூன்றாவது பாகமும் உருவாகிறது என்பது ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் செய்தியாக அமைந்திருக்கிறது. இதற்கு முன்பு ஆகஸ்ட்டில் வெளியிட திட்டமிட்டிருந்த ‘இந்தியன்2’ படம், அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ பட ரிலீஸால் முன் கூட்டியே வெளியாகிறது என்ற பேச்சும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...   


போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவு... தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வங்கிக் கணக்கு முடக்கம்... வருமான வரித்துறையின் அடுத்த அதிரடி!

கோவையில் ரூ.3.54 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்... தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது!

கிளம்பிட்டாரு நவரச நாயகன் கார்த்திக்... அதிமுகவுக்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் பிரச்சாரமாம்!

11 வயதில் வீட்டை விட்டு அனுப்பி வைத்தார்கள்...மனம் உடைந்த பிரபல நடிகர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in