ரிலீஸ் தள்ளிப் போன ‘இந்தியன்2’... காரணம் இதுதான்!

'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசன்
'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசன்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இந்தியன்2’ திரைப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்து இருக்கிறது. ஏப்ரல் அல்லது மே மாதம் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில், படம் தள்ளிப் போனதன் காரணம் இப்போது வெளியாகி இருக்கிறது.

இந்தியன் 2
இந்தியன் 2

இயக்குநர் ஷங்கர்- கமல்ஹாசன் ‘இந்தியன்2’ படத்திற்காக பல வருடங்கள் கழித்து இணைந்திருக்கிறார்கள். படம் தொடங்கப்பட்ட ஆரம்பத்தில் பல பிரச்சினைகள் வந்து, இடை நிறுத்தப்பட்டாலும் பின்பு படப்பிடிப்பு தொடங்கியது. இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்து மூன்றாம் பாகத்திற்கான படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்தது.

இந்த நிலையில், படம் ஏப்ரல் அல்லது மே மாதம் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

’இந்தியன்2’ படத்தில் நடிகர் கமல்ஹாசன்
’இந்தியன்2’ படத்தில் நடிகர் கமல்ஹாசன்

இதற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. அதாவது, படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் சிறப்பாக வர வேண்டும் என்பதில் இயக்குநர் ஷங்கர் தெளிவாக இருக்கிறாராம். இதனால், கூடுதல் அக்கறை எடுத்து கிராஃபிக்ஸ் பணிகளை கவனிக்க இருக்கிறார். இதற்கிடையில் ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படத்தையும் அவர் இயக்கி வருகிறார்.

இதனால், முழுமையாக ‘இந்தியன்2’ கிராஃபிக்ஸ் பணிகளுக்காக அடுத்த மாதம் குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார் ஷங்கர். இந்தக் காரணத்தை வைத்தே, ஜூன் மாதத்திற்கு பட வெளியீட்டைத் தள்ளி வைத்திருக்கிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...   

பிரச்சாரத்தில் நடிகை காஜலுக்கு திடீர் மாரடைப்பு... மருத்துவமனையில் அனுமதி!

காதலனை நம்பி சென்ற கல்லூரி மாணவி கொலை... பணத்திற்காக நடந்த கொடூரம்!

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு... இடைத் தேர்தல் எப்போது?

ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த நபர் உயிருக்குப் போராட்டம்!

கையில் சூலம்... காலில் சலங்கை... மிரட்டும் அல்லு அர்ஜூன்... தெறிக்குது ’புஷ்பா2’ டீசர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in