அடுத்த அவார்ட் ரெடி... ’புஷ்பா2’ படத்தின் முதல் சிங்கிள் அறிவிப்பு வெளியானது!

’புஷ்பா2’
’புஷ்பா2’

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா2’ படத்தின் முதல் சிங்கிள் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. ரிலீஸுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகளை இப்போதிருந்தே படக்குழு தொடங்கியுள்ளது. ஓடிடி உரிமம், டிஜிட்டல் ரைட்ஸ் என படம் வெளியாவதற்கு முன்பே ‘புஷ்பா2’ லாபம் பார்த்துவிட்டது என்கின்றனர்.

’புஷ்பா2’ டீசரில் அல்லு அர்ஜூன்...
’புஷ்பா2’ டீசரில் அல்லு அர்ஜூன்...

கடந்த 2021ல் வெளியான ‘புஷ்பா1’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ‘ஊம் சொல்றியா மாமா’, ‘ஸ்ரீவள்ளி’ என அனைத்துப் பாடல்களுமே ரசிகர்களைக் கவர்ந்தது. நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இருவருக்குமே ‘புஷ்பா1’ படத்திற்காக தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் அல்லு அர்ஜூன் பிறந்தநாளின் போது வெளியான ‘புஷ்பா2’ டிரெய்லரும் மாஸ் காட்டியது. இப்போது படத்தில் இருந்து முதல் சிங்கிள் வெளியாவது குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘புஷ்பா புஷ்பா... புஷ்பாராஜ்’ என்ற முதல் சிங்கிள் வரும் மே 1 அன்று காலை 11.07 மணிக்கு வெளியிரப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதற்கான புரமோவும் தற்போது வெளியாகியுள்ளது. பாடலின் தீவிரத்தைக் கேட்ட ரசிகர்கள், ‘தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு அடுத்த அவார்ட் ரெடி...’ என உற்சாகமாக சொல்லி வருகின்றனர். இந்தப் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். சமந்தாவுக்கு பதிலாக ஸ்ரீலீலா ஸ்பெஷல் டான் இந்தப் பாகத்தில் நடனம் ஆடுவார் எனத் தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...


“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in