எம்.ஆர் விஜயபாஸ்கர்
எம்.ஆர் விஜயபாஸ்கர் 
அரசியல்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்... உயர் நீதிமன்றம் உத்தரவு!

காமதேனு

அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை தடுத்ததாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

உயர் நீதிமன்றம்

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2022ம் ஆண்டு முதல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என்ன? அதன் தற்போதைய நிலை என்ன? என பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், விஜயபாஸ்கர் மீது 23 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அதில் சில வழக்குகள் ரத்து செய்யபட்டுவிட்டதாகவும், சில வழக்குகளின் விசாரணை நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இதையடுத்து நீதிபதி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ஒரு லட்சம் ரூபாய்க்கான பிணைத் தொகை உத்தரவாதத்தை செலுத்தவும், விசாரணைக்கு தேவைப்படும் போது நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT