நயினார் நாகேந்திரன் 
அரசியல்

தேர்தல் நடத்தை விதிமீறல்... நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு!

காமதேனு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நயினார் நாகேந்திரன்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடக்க உள்ளது. தமிழகத்திலும், புதுவையிலும் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதனால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பிரச்சாரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் மற்றும் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அளிக்கும் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

நயினார் நாகேந்திரன்

இந்நிலையில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவர், இத்தொகுதியில் கண்டிப்பாக வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் நயினார் நாகேந்திரன் மற்றும் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்ததாக பறக்கும்படை அதிகாரி தினேஷ்குமார் அளித்த புகாரின்பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   


பிரச்சாரத்தில் நடிகை காஜலுக்கு திடீர் மாரடைப்பு... மருத்துவமனையில் அனுமதி!

காதலனை நம்பி சென்ற கல்லூரி மாணவி கொலை... பணத்திற்காக நடந்த கொடூரம்!

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு... இடைத் தேர்தல் எப்போது?

ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த நபர் உயிருக்குப் போராட்டம்!

கையில் சூலம்... காலில் சலங்கை... மிரட்டும் அல்லு அர்ஜூன்... தெறிக்குது ’புஷ்பா2’ டீசர்!

SCROLL FOR NEXT