எல்ஐசி
எல்ஐசி  
தேசம்

சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்கள்... பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி எச்சரிக்கை

காமதேனு

எல்ஐசி நிறுவனத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் மோசடியான விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக, எல்ஐசி நிறுவனம் தனது பாலிசிதாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக ஊடக தளங்களில் மோசடியான விளம்பர நடைமுறைகளில் ஈடுபடும் சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நிறுவனம் பொதுமக்களை எச்சரித்து உள்ளது. இந்த விளம்பரங்கள் மூத்த அதிகாரிகளின் படத்தையும், நிறுவனத்தின் பிராண்ட் பெயர் மற்றும் லோகோவையும் தவறாகப் பயன்படுத்துவதாகவும் எல்ஐசி தெரிவித்துள்ளது.

எல்ஐசி வெளியிட்ட எச்சரிக்கை

"சில தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், எங்கள் மூத்த அதிகாரிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகளின் படத்தையும், எங்கள் பிராண்ட் லோகோ மற்றும் எங்கள் பிராண்ட் பெயரையும் எல்ஐசியின் அனுமதி இன்றி தவறாகப் பயன்படுத்தி பல்வேறு சமூக ஊடக தளங்களில் மோசடியான விளம்பர நடைமுறைகளில் ஈடுபடுகிறார்கள்.

இவை தொடர்பான புகார்கள் எங்கள் கவனத்திற்கு தொடர்ச்சியாக வந்துள்ளன. இவை முற்றிலும் மோசடியானவை. எல்ஐசி நிறுவனம் எவருக்கும் இது போன்ற அங்கீகாரத்தை வழங்கவில்லை. இந்த ஏமாற்று நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கவும் விரும்புகிறோம்” என்று எல்ஐசி நிறுவனத்தின் அறிவிப்பு விளக்குகிறது.

மேலும் ”எல்ஐசியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளில் இதுபோன்ற மோசடியான விளம்பரங்களின் இணைய இணைப்புகளைப் புகாரளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம். அங்கீகாரம் இன்றி எங்கள் பிராண்டைப் பயன்படுத்தி மோசடி செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நாங்கள் உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம்” என்றும் எல்ஐசியின் அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி

இவற்றுடன் பாலிசிதாரர்கள் மற்றும் பொதுமக்கள் இது போன்ற ஏமாற்றும் நடைமுறைகளால் தவறாக வழிநடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறும் எல்ஐசி கோரிக்கை விடுத்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT