கரடி வேடமணிந்து போதைப்பொருள் விற்ற பெண்ணை கைது செய்த போலீஸார் 
சர்வதேசம்

போதைப்பொருள் விற்ற பெண்கள்.. கரடி வேடத்தில் சென்று மடக்கிய போலீஸார்... வியக்க வைக்கும் வீடியோ!

காமதேனு

பெரு நாட்டில், கரடி பொம்மை வேடமிட்டு சென்று போதைப் பொருள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்யும் வீடியோ, இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

பெரு நாட்டில் போதை பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. உள்ளூர் அளவில் அதிகரித்து வரும் இது போன்ற குழுக்கள், வீடுகளில் வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். அவர்களை பிடிப்பதற்காக காவல்துறையில் 'கிரீன் ஸ்குவாட்' என்ற புதிய பிரிவு துவங்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த குழுவினர் பல்வேறு யுக்திகளை கையாண்டு, பொதைப்பொருள் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் பெண் ஒருவர் போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்வதற்காக போலீஸார் நூதன முறை ஒன்றை கடைபிடித்துள்ளனர். கரடி பொம்மை வேடமிட்டு, கையில் சாக்லேட் பெட்டியை எடுத்துக்கொண்டு காவலர் ஒருவர் அந்த பெண்ணின் வீட்டு கதவை தட்டி உள்ளார். வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது கரடி பொம்மை நின்றிருப்பதை கண்டு குழப்பம் அடைந்தாலும், அந்த பெண் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார்.

கரடி வேடத்தில் பெண்களை கைது செய்த போலீஸார்

அப்போது கரடி பொம்மை வேடத்தில் இருந்த காவலர் அந்த பெண்ணுக்கு சாக்லேட் பெட்டியை கொடுத்துள்ளார். அதனை வாங்குவதற்காக அந்த பெண் கை நீட்டிய போது, அவரது கரங்களில் கை விலங்கு பூட்டிய போலீஸார் அந்த பெண்ணை கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு பெண்ணை அதே வேடத்தில் சென்று போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த பெண்களிடம் இருந்து சுமார் 1000 கொக்கைன் போதை சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொக்கைன் பேஸ்ட் சாக்லேட்கள் பறிமுதல்

காதலர் தினத்தன்று நடந்த இந்த சுவாரஸ்ய சம்பவம் தொடர்பான வீடியோவை, பெரு நாட்டு போலீஸார் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...  


தேர்தல் அதிகாரியை தாக்கியதாக வழக்கு; மு.க.அழகிரி உள்ளிட்டோர் விடுதலை!

சிறுநீரில் இருந்து மின்சாரம்... மாத்தியோசித்த பாலக்காடு ஐஐடி மாணவர்கள்!

முன்னாள் பிரதமருக்கு திடீர் உடல் நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி!

கெட்டதிலும் ஒரு நல்லது... மகன் இறப்புக் குறித்து சூர்யாவிடம் உருகிய சைதை துரைசாமி!

விவசாயிகள் போராட்டத்தில் அதிர்ச்சி... மாரடைப்பால் ஒருவர் உயிரிழப்பு! வார விடுமுறையை முன்னிட்டு 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் கவனத்திற்கு... அரசு தேர்வுகள் துறை இயக்குநர் முக்கிய அறிவிப்பு!

பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... 8 கடைகளில் பரவியதில் 11 பேர் பலி!

மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு.... திமுகவில் பரபரப்பு!

பத்தாம் வகுப்பு தேர்வில் அதிரடி மாற்றம்... இனி இதுவும் கட்டாயம்!

SCROLL FOR NEXT