விவசாயிகள் போராட்டத்தில் அதிர்ச்சி... மாரடைப்பால் ஒருவர் உயிரிழப்பு!

நெஞ்சுவலியால் விவசாயி உயிரிழப்பு
நெஞ்சுவலியால் விவசாயி உயிரிழப்பு

ஹரியாணா மாநிலம், அம்பாலா அருகே சம்பு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் ஒருவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சம்பு எல்லையில் விவசாயிகள்
சம்பு எல்லையில் விவசாயிகள்

விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூர்வ உத்தரவாதம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டுள்ளனர்.

இவர்கள் போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே ஹரியாணா மாநிலம், அம்பாலா மாவட்டம் சம்பு எல்லையில் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

 கியான் சிங்
கியான் சிங்

தடுப்புகளை மீற முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் தொடர்ந்து முன்னேற முடியாமல் கடந்த 3 நாள்களாக சம்பு எல்லையிலேயே விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், போராட்டக் களத்தில் இருந்த கியான் சிங் (63) என்ற முதியவருக்கு இன்று காலை முதல் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பஞ்சாபின் ராஜ்புராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவில் உள்ள ராஜீந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கியான் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பு எல்லையில் காத்திருக்கும் விவசாயிகள்
சம்பு எல்லையில் காத்திருக்கும் விவசாயிகள்

பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கியான் சிங், இரண்டு நாட்களுக்கு முன்பு சம்பு எல்லைக்கு வந்து விவசாயிகளின் 'டெல்லி சலோ' பேரணியில் பங்கேற்றார். தங்களுடன் போராட்டக்களத்தில் இருந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் மற்ற விவசாயிகளிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


குட்நியூஸ்... வார விடுமுறையை முன்னிட்டு 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் கவனத்திற்கு... அரசு தேர்வுகள் துறை இயக்குநர் முக்கிய அறிவிப்பு!

பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... 8 கடைகளில் பரவியதில் 11 பேர் பலி!

மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு.... திமுகவில் பரபரப்பு!

பத்தாம் வகுப்பு தேர்வில் அதிரடி மாற்றம்... இனி இதுவும் கட்டாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in