தன் மகன் இறப்பிலும் ஒரு நல்லது நடந்துள்ளது என்று சைதை துரைசாமி கூறியுள்ளார். வெற்றி துரைசாமி இறப்பிற்கு ஆறுதல் கூற வந்த நடிகர்கள் சிவகுமார், சூர்யாவிடம்தான் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவரான வெற்றி துரைசாமி, இமயமலைக்கு பயணப்பட்டபோது எதிர்பாராதவிதமாக சட்லஜ் நதியில் அவரது கார் விழுந்து விபத்திற்குள்ளானது. ஒரு வாரத்திற்கும் மேலான தேடுதலுக்குப் பின்பே அவரது உடல் மீட்கப்பட்டது.
சென்னைக்குத் தனி விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், வைகோ, எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதுபோலவே, வெற்றியின் நெருங்கிய நண்பரான நடிகர் அஜித்தும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் ரஜினிகாந்தும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இப்போது நடிகர்கள் சிவகுமார் மற்றும் சூர்யா இருவரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். அவர்களிடம் சைதை துரைசாமி, “என் மகன் இறப்பு என்ற கெட்ட விஷயத்தில் நடந்த நல்லது என்னவென்றால் அவன் உடல் கிடைத்ததுதான். இல்லை என்றால் அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என விஷயம் மனதை நெருடிக் கொண்டே இருக்கும். வந்த அனைவருமே, ‘அப்பா நாங்க இருக்கோம்’ என ஆறுதல் சொன்னார்கள். ஒரு மகனை இழந்தாலும், இத்தனை மகன்கள் கிடைத்திருக்கிறார்கள் என்ற ஆறுதல் கிடைத்தது. ஏதோ ஒரு நல்ல விஷயதிற்காகதான் இப்படி ஒரு கெட்ட விஷயம் நடந்திருக்கிறது” என உருக்கமாகக் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
குட்நியூஸ்... வார விடுமுறையை முன்னிட்டு 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் கவனத்திற்கு... அரசு தேர்வுகள் துறை இயக்குநர் முக்கிய அறிவிப்பு!
பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... 8 கடைகளில் பரவியதில் 11 பேர் பலி!
மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு.... திமுகவில் பரபரப்பு!
பத்தாம் வகுப்பு தேர்வில் அதிரடி மாற்றம்... இனி இதுவும் கட்டாயம்!