சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய கருவியை உருவாக்கி பாலக்காடு ஐஐடி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
உலகம் முழுவதும் மரபுசாரா எரிசக்தி மற்றும் சுத்தமான மின்சாரத்தை தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சூரிய ஒளி மின்சாரம், காற்று மூலம் மின்சாரம், கடல் அலைகள் மூலம் மின்சாரம் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மனிதர்களின் கழிவுகளில் இருந்தும் மின்சாரம் தயாரிக்க முடியுமா என்கிற ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஐஐடி மாணவர்கள் தற்போது புதிய கருவி ஒன்றை கண்டறிந்து அசத்தல் சாதனை படைத்துள்ளனர். 'எலக்ட்ரோ கெமிக்கல் ரிசோர்ஸ் ரெக்கவரி ரியாக்டர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரம் மூலமாக, சிறுநீரில் இருந்து மின்சாரம் மற்றும் உரங்களை தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைக்கு சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம், வரும் காலங்களில் அதிக அளவு தயாரிக்கப்படும் போது மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கும் என ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத மின்சாரம் கிடைப்பதோடு, வேளாண் தொழிலுக்கு முக்கிய ஆதாரமாக இருந்து வரும் உரங்களும் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மனிதர்கள் மற்றும் விலங்குகளின் சிறுநீரில் கலந்துள்ள அணுக்களை பயன்படுத்தி இந்த மின்சார தயாரிக்கும் இயந்திரம் செயல்படும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இயந்திரம் மூலமாக 50 பேட்டரிகள் தயாரிக்கும் 500 மில்லி வாட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும் எனவும், 7 முதல் 12 வோல்ட்ஸ் அளவில் மின்சாரம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்சாரத்தை பயன்படுத்தி செல்போன்களை சார்ஜ் செய்வது, சிறிய எல்இடி விளக்குகளை தொடர்ந்து பயன்படுத்துவது போன்றவற்றில் ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மின்சார தயாரிப்பின் போதே, 24 முதல் 48 மணி நேரத்திற்குள் 10 கிராம் உரங்களும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி தொடர்பான விரிவான கட்டுரை தற்போது அறிவியல் புத்தகம் ஒன்றில் பதிப்பித்து மாணவர்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
குட்நியூஸ்... வார விடுமுறையை முன்னிட்டு 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் கவனத்திற்கு... அரசு தேர்வுகள் துறை இயக்குநர் முக்கிய அறிவிப்பு!
பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... 8 கடைகளில் பரவியதில் 11 பேர் பலி!
மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு.... திமுகவில் பரபரப்பு!
பத்தாம் வகுப்பு தேர்வில் அதிரடி மாற்றம்... இனி இதுவும் கட்டாயம்!