ட்ரை ஐஸ்
ட்ரை ஐஸ் 
க்ரைம்

ட்ரை ஐஸ் விற்பனை செய்தால் 10 ஆண்டுகள் சிறை... உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

காமதேனு

திரவ நைட்ரஜன் எனப்படும் ட்ரை ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்கக்கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் அதன் புகையை தாங்க முடியாமல் கூச்சலிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் சென்னையில் ஸ்மோக் பிஸ்கட் தயார் செய்யும் இடங்களில் ஆய்வு செய்தார்.

ஆய்வு செய்த பின் இது தொடர்பாக அவர் பேசுகையில், "குழந்தைகளுக்கு நைட்ரஜன் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக்கூடாது. உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

திரவ நைட்ரஜன்

உத்தரவை மீறி ட்ரை ஐஸை உணவுக்குப் பயன்படுத்தினால், 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்" என எச்சரித்தார்.

திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை உட்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படலாம். திரவ நைட்ரஜன் உயிருள்ள திசுக்களில் படும்போது கடுமையான உறை பனியை ஏற்படுத்தும் அளவுக்கு குளிர்ச்சியானது.

ஸ்மோக் பிஸ்கட்

திரவ நைட்ரஜனை குடிப்பதால் திசுக்கள் உறைந்து இரைப்பைக் குழாய் சிதையக்கூடும். டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை, பேசும் திறன் பறிபோகும் ஆபத்தும் உள்ளது. இதனால் உயிரிழப்புகள் நேரலாம்.


“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

வாக்காளர்களுக்கு பகிரங்க மிரட்டல்... ஆளுங்கட்சி எம்எல்ஏ-வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

நட்சத்திர ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்... வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தாமதமாகும் ‘வேட்டையன்’... இயக்குநர் மீது ரஜினி அப்செட்?!

தேர்தல் நேரத்துல வெட்டவெளியில் கிடந்த அதிபயங்கர வெடிகுண்டுகள்... ஆர்எஸ்எஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT