பயணிகளின் கனிவான கவனத்திற்கு... ஒரே நாளில் 53 மின்சார ரயில்கள் ரத்து!

மின்சார ரயில்
மின்சார ரயில்

சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் நாளை(அக்.31) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலாலன மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்கள் காலை 10.18 முதல் பிற்பகல் 2.45 வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மின்சார ரயில்
மின்சார ரயில்

அதே போல் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் காலை 9.08 முதல் பிற்பகல் 3.20 வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 2.20 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30க்கு புறப்படும் ரயில், திருமால்பூரில் இருந்து காலை 11.05க்கு புறப்படும் ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

மின்சார ரயில்
மின்சார ரயில்

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே காலை 11.51, பகல் 12.35, 1.15, 1.35, 1.55, பிற்பகல் 2.45, 3.10, 3.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதே போல் செங்கல்பட்டு – தாம்பரம் இடையே காலை 9.30, பகல் 12.00 மணி, 1.00 மணி, 1.15 மணி, பிற்பகல் 2.20 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு

நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!

சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in