தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு

மழை
மழை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழையைப் பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

வானிலை அறிவிப்பு
வானிலை அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இலங்கை மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு ஆகிய 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in