அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!

ஆபரணத் தங்கம்
ஆபரணத் தங்கம்

கடந்த சில தினங்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்
தங்கம்

கடந்த சில தினங்களாகவே ஏற்றத்துடன் விற்பனையான தங்கம் இன்று விலை குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,770 ரூபாயாகவும், ஒரு சவரன் 46,160 ரூபாயாகவும் விற்பனையானது. இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் 5,735 ரூபாயாகவும், சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 45,880 ரூபாயாக விற்பனையாகிறது.

அதே போல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 6,205 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, 49,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி
வெள்ளி

வெள்ளி கிராமுக்கு 1ரூபாய் உயர்ந்து, 78.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1000 ரூபாய் உயர்ந்து 78,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ’’தங்கம் விலை இப்போது அதிகரிக்க ஒரே காரணம் இஸ்ரேல் ஹமாஸ் போர் மட்டுமே காரணம். போர் சீக்கிரம் முடிவுக்கு வந்தால் தங்கம் விலை குறைந்துவிடும். போர் முடியாமல் தொடர்ந்து கொண்டே போனால் தங்கம் விலை இதே நிலையில் தான் தொடரும்’’ என்கிறார்கள் பொருளாதார ஆலோசகர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in