சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து

ரயில் விபத்து
ரயில் விபத்து
Updated on
1 min read

ஆந்திராவில் நின்று கொண்டிருந்த ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலியான பயணிகள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ள நிலையில், 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மீட்பு நடவடிக்கை
மீட்பு நடவடிக்கை

ஆந்திரா மாநிலம் விஜயநகர மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நேற்று விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் நின்று கொண்டிருந்தது. ரயில் பாதையின் மேல் உள்ள கேபிள் பிரச்சினை காரணமாக அந்த ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது.

ரயில்வே ஊழியர்கள் அந்தப் பிரச்சினையை சரி செய்யும் பணியில் அப்போது ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது பயங்கரமாக மோதியது.

இந்த ரயில் விபத்தில் 3 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இதனால் அந்தப் பெட்டிகளில் ஏராளமான பயணிகள் சிக்கிக் கொண்டு காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள், போலீஸார், மீட்புப் படையினர் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

சிதிலான ரயில் பெட்டி
சிதிலான ரயில் பெட்டி

இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்புகள் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, 22 ரயில்கள் வேறு மார்க்கமாக திருப்பிவிடப் பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in