‘வில்லேஜ் குக்கிங்’ பெரிய தம்பி தாத்தா மருத்துவமனையில் அனுமதி! இதயநோய்க்கு அறுவைசிகிச்சை!

மருத்துவமனையில் பெரியதம்பி தாத்தா
மருத்துவமனையில் பெரியதம்பி தாத்தா

வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலின் பிரபலம் பெரியதம்பி தாத்தா இதய நோய்ப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழில் மிகவும் பிரபலமான  வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலுக்கு  2.4 கோடி சப்ஸ்கிரைபர்ஸ்கள் இருக்கிறார்கள். கிராமத்து சமையலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சேனல் இது. இந்த சேனலை சுப்பிரமணியன், அய்யனார், முருகேசன், தமிழ்ச்செல்வன், முத்து மாணிக்கம் ஆகிய சகோதரர்களுடன் தாத்தா பெரிய தம்பி நடத்தி வருகிறார். 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இவர்களின் சமையல் படுபிரபலம். இதில் பெரிய தம்பி தாத்தாவின் வசன உச்சரிப்புக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இன்னைக்கு ஒரு புடி என்ற அவரது வசனம் மிக பிரபலமானது. சமையலை கிராமத்து வார்த்தைகளில் அவர் சொல்லச் சொல்ல கேட்டு ரசிப்பது ரசிகர்களுக்கு மிகவும் பிரியமானது.

வயதான காலத்திலும் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு இவர் செய்யும் சமையல் அனைவரையும் வியக்க வைக்கும். இவரது வேகம் இளைஞர்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் இருக்கும். இந்த நிலையில் இவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. இதய நோய் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,  தற்போது அவர் நலமுடன் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2019 தேர்தல் காலகட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த வில்லேஜ் குக்கிங் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். சமையலில் பங்குபெற்ற அவர் தயிரு என்ற தாத்தாவின் வார்த்தையை அப்படியே உச்சரித்தது பல லட்சம் பேரால் ரசிக்கப்பட்டது. அந்தளவுக்குத் தமிழ்நாட்டைத் தாண்டி  மிகவும் புகழ் பெற்ற சேனலாக விளங்கி வருகிறது. பெரியதம்பி தாத்தா விரைவில் குணமடைந்து அடுத்த எபிசோடில் கலந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...  


இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in