தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்... இன்று பரிசீலனை!

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்காக  மொத்தம் 1403 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்பு மனு
வேட்பு மனு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. அரசியல் கட்சிகளில் வேட்பாளர்கள் மற்றும் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 

பல்வேறு தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன. வடசென்னை தொகுதியில் திமுக அமைச்சர் சேகர்பாபு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே நேரடியான கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல்கள் போலவே வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளர்களுக்கு இடையே நட்பும் பூத்தது. 

கட்டித் தழுவும் தமிழிசை, தமிழச்சி
கட்டித் தழுவும் தமிழிசை, தமிழச்சி

தென் சென்னை போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனும் தமிழிசை சவுந்தரராஜன் கட்டித்தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். விருதுநகரில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான ராதிகாவும், விஜயபிரபாகரனும் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். சட்டை இல்லாமல் வந்தது,  பத்து ரூபாய் நாணயங்களுடன் வந்தது, நடனம் ஆடியவாறு வந்தது என  வேட்பு மனு தாக்கல் பல்வேறு சுவாரசியங்களுடன்  நடந்து முடிந்துள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் கடைசி நாளில் மட்டும் 652 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  ஆக 39 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 1403 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி தொகுதியில் சுமார் 45 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

இவர்களின்  வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் 30ம் தேதி வரை உள்ளதால் அன்று மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in