முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

எஸ்.பி வேலுமணி
எஸ்.பி வேலுமணி

தொகுதியில் உள்ள அனைத்து  பூத் கமிட்டிகளுக்கும் முதலில்  ஆள் போடுங்கள், பின்பு எங்களிடம் போட்டிக்கு வாருங்கள் என்று பாஜக குறித்து  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சனம் செய்துள்ளார்.

எஸ்.பி.வேலுமணி வேட்பாளர் கார்த்திகேயன்
எஸ்.பி.வேலுமணி வேட்பாளர் கார்த்திகேயன்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் கோவை குளத்துப்பாளையம் பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட எஸ்.பி. வேலுமணி வேட்பாளர், கார்த்திகேயனை கட்சித் தொண்டர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து பேசினார்.

அப்போது, “யார் நம்முடைய போட்டி? யார் நமக்கு எதிரி? இதை முதலில் யோசியுங்கள். என்றைக்கும் நமக்கு திமுக தான் நம் போட்டி. திமுகவில் ரியல் எஸ்டேட் செய்பவர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். ஆனால்  அதிமுகவை பொறுத்தவரை கட்சியில் உழைப்பவர்கள் பெரிய பொறுப்புக்கு வரலாம். கிளை செயலாளராக இருப்பவர்கள் பொதுச் செயலாளராக, முதல்வராக வர முடியும் என்பதற்கு எடப்பாடி பழனிசாமி முன்னுதாரணமாக திகழ்கிறார். 

எஸ்.பி.வேலுமணி வேட்பாளர் கார்த்திகேயன்
எஸ்.பி.வேலுமணி வேட்பாளர் கார்த்திகேயன்

4% ஓட்டுகளை மட்டுமே வைத்துக்கொண்டு அண்ணாமலை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். களத்தில் இல்லாத அண்ணாமலை அதிமுகவுக்கு போட்டியில்லை.

பாஜக வாட்ஸ் அப், செல்போனில் ஐ.டி.விங் வைத்துக்கொண்டு அரசியல் செய்து வருகின்றனர். பாஜக முதலில் 10 பூத்தில் ஆட்கள் போடுங்கள், அதன்பின் எங்களிடம் போட்டிக்கு வாருங்கள். பாஜக எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது. அவர்களைப் பற்றி கவலையும் இல்லை” என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in