தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

தமிழ்நாட்டில் 120 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 55 பேர்... தேர்தல் ஆணையம் சொன்ன ஆச்சரிய தகவல்!

தமிழ்நாட்டில் 120 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 55 பேர் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக மார்ச் 20-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தமிழ்நாட்டில் தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. வரும் 30-ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 55 வாக்காளர்கள் 120 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 120 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 55 பேர் உள்ளனர். இவர்களில் 27 பேர் ஆண்கள், 28 பேர் பெண்கள். 90 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2,06,574. இவர்களில் ஆண் வாக்காளர்கள் 99,439. பெண் வாக்காளர்கள் 1,07,128. மேலும் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 14,44,851 பேர் உள்ளனர்.

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 6,23,33, 925. இதில் 3,06,05,793 பேர் ஆண் வாக்காளர்கள். பெண் வாக்காளர்கள் 3,17,19,665. மூன்றாம் பாலின வாக்காளர்கள் 8,467 பேர் உள்ளனர் மேலும் 40 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களாக உள்ளனர், அதாவது 1,37,96,152 வாக்காளர்கள் உள்ளனர்.

அத்துடன் 30 முதல் 39 வயது பிரிவு வாக்காளர்களாக 1,29,00,263 பேர் உள்ளனர்" என்றார். மேலும்," 85 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து தங்கள் வீடுகளில் இருந்து வாக்களிக்க 7 லட்சம் கோரிக்கைகள் ஆணையத்திற்கு வந்துள்ளது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளும் கோரிக்கைகளை அனுப்பியுள்ளனர்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in