ஸ்ருதிஹாசனுடன் ’பப்’பில் பார்ட்டி... என்ன நடக்குது லோகேஷ்?

ஸ்ருதிஹாசன்- லோகேஷ் கனகராஜ்
ஸ்ருதிஹாசன்- லோகேஷ் கனகராஜ்

’இனிமேல்’ ஆல்பம் வெளியாகி ஒரு வாரம் ஆன பிறகும் ஸ்ருதிஹாசனுடன் பார்ட்டி செய்ய லோகேஷ் கனகராஜ் பப் ஒன்றிற்கு சென்றிருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து பப்பில் நைட் பார்ட்டி செய்திருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘இனிமேல்’ என்ற மியூசிக் ஆல்பம் சமீபத்தில் வெளியானது. தான் இயக்கும் படங்களில் எல்லாம் காதல், ரொமான்ஸ் ஏரியாவை பெரிதாக கண்டுகொள்ளாத லோகேஷ், தான் நடித்துள்ள இந்தப் பாடலில் ஸ்ருதியுடன் காட்டிய நெருக்கம் ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்தது.

அதேபோல, சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியைக் காண ஸ்ருதி, லோகேஷ் இருவரும் இணைந்து வந்திருந்த புகைப்படமும் வைரலானது. இப்படி இருக்கையில், ’ஆல்பம் வெளியாகி ஒரு வாரம் ஆகப்போகிறது. அப்படி இருந்தும், ஸ்ருதிஹாசனுடன் பார்ட்டி செய்து கொண்டிருக்கிறார். என்ன நடக்குது லோகேஷ்?’ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

’இனிமேல்’
பாடலில்
’இனிமேல்’ பாடலில்

ஆனால், இது ஆல்பம் ரிலீஸ் சக்சஸ் பார்ட்டி என்றும் ஸ்ருதி, லோகேஷூடன் ஆல்பம் குழுவினர் பலரும் இருக்கின்றனர் என்றும் வீடியோவைப் பார்த்த இன்னொரு தரப்பினர் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இப்போது ரஜினிகாந்தின் ‘தலைவர் 171’ பட ஸ்கிரிப்ட்டில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தை முடித்த கையோடு ‘கைதி2’ படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருக்கிறார் லோகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...  


இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in