இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

உயிரிழந்த யோகேஷ். கைது செய்யப்பட்ட மெக்கானிக் முரளி.
உயிரிழந்த யோகேஷ். கைது செய்யப்பட்ட மெக்கானிக் முரளி.

பைக் சர்வீஸ் சென்டரில் ஏர் பிடிக்கும் கம்பரசரில் ஆசனவாயில் காற்று பிடித்ததில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது நண்பரான பைக் மெக்கானிக் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள விஜயபுராவைச் சேர்ந்தவர் யோகேஷ்(28). டெலவேர் ஏஜென்டாக பணிபுரிந்து வந்த அவர், தனிசந்திராவில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சம்பிகேஹள்ளியில் உள்ள சிஎன்சி(சிஎன்எஸ்) பைக் சர்வீஸ் சென்டருக்கு சென்றுள்ளார். தனது வாகனத்தை சர்வீஸ் செய்ய வேண்டும் என்று கடையில் இருந்த அவரது நண்பரான மெக்கானிக் முரளியிடம் கூறியுள்ளார்.

அப்போது ஏர் பிடிக்கும் கம்பரசரில் இருந்து திறந்து விடப்பட்ட காற்றைக் கொண்டு முரளியும், யோகேசும் விளையாடிக் கொண்டிருந்தார். முதலில் யோகேஷின் முகத்தில் காற்றை அடித்தார். அப்போது விளையாட்டாக, யோகேஷின் ஆசனவாயிலில் முரளி காற்றைப் பிடித்துள்ளார். இதனால் யோகேஷின் வயிறு வீங்கி மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி யோகேஷ் உயிரிழந்தார்.

ஏர் பிடிக்கும் கம்பரசரில் இருந்து வெளியேறிய காற்று மூலம் வயிற்றுக்குள் குடல் வெடித்து யோகேஷ் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து யோகேஷின் பெற்றோர், சம்பிகேஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில், 304 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், முரளியை இன்று கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த டிசிபி லட்சுமி பிரசாத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதையும் வாசிக்கலாமே...  


இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in