ராமநாதபுரத்தில் 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்களும் ஏற்பு... திகிலில் உறைந்த ஓ.பன்னீர்செல்வம்!

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 5 ஓபிஎஸ்களின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் இயங்கி வருகிறார். மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சையாக போட்டியிட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

பொதுவாக ஏதேனும் தொகுதியில் முக்கிய தலைவர்கள் போட்டியிட்டால், அவரின் பெயர் கொண்ட பலரும் போட்டியிடுவது வழக்கம். ஆனாலும் ஒரே இனிசியல் போன்றவற்றவை அமைவது கஷ்டம்தான். இந்த சூழலில்தான் ராமநாதபுரத்தில் ஒ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 4 பேர் போட்டியில் குதித்துள்ளது ஓபிஎஸ் டீமை பீதியடைய வைத்துள்ளது.

5 ஓபிஎஸ்கள்
5 ஓபிஎஸ்கள்

ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில், மதுரை மாவட்டம் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம், ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே தெற்கு காட்டூரைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம், மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வாகைக்குளத்தைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வம், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் என 4 ஒ.பன்னீர்செல்வங்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். மேலும் எம்.பன்னீர்செல்வம் என்ற பெயரிலும் ஒருவர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தார்.

நேற்றோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதில் ராமநாதபுரத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தில் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடிய சூடு ஆறுவதற்குள், அவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ஓபிஎஸ் என்ற பெயரில் மனுதாக்கல் செய்த 4 பேரின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இப்போது 5 ஓபிஎஸ்கள் களத்தில் உள்ளார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் நிற்கவுள்ளார். இந்த சூழலில் இன்னும் 4 ஒ.பன்னீர்செல்வங்களும் சுயேட்சையாக களமிறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எழுத்து வரிசைப்படி இந்த 5 பேரின் பெயர்களும் அருகருகே இடம்பிடித்தால் தங்களுக்கான வாக்குகள் பிரியும் என்று அஞ்சுகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். இப்போது 5 ஓபிஎஸ் உட்பட 6 பன்னீர்செல்வங்கள் களத்தில் இறங்கியுள்ளது ராமநாதபுரத்தை கிறுகிறுக்க வைத்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in