நிறுத்தியிருந்த லாரிக்குள் புகுந்த மலைப்பாம்பு
நிறுத்தியிருந்த லாரிக்குள் புகுந்த மலைப்பாம்பு

லாரிக்குள் புகுந்த மலைப்பாம்பு... 5 மணி நேரமாக மீட்க போராடும் வனத்துறை

கோவை அருகே இரவில் நிறுத்திய லாரிக்குள் புகுந்த மலைப்பாம்பை சுமார் 5 மணி நேரமாக மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு- கேரளா எல்லைப்பகுதியான வாளையாறு சோதனைச்சாவடி அருகே, இரு மாநிலங்களுக்கு இடையே பயணிக்கும் கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் ஓய்வுக்காகவும், போக்குவரத்துத்துறை ஆய்வுக்காகவும் இரவில் நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து ஆந்திராவிற்கு இரும்பு பைப்புகளை ஏற்றி சென்ற லாரி ஒன்று, கோவை எட்டிமடை பிரிவு அருகே நிறுத்தி வைக்கப்பட்டது.

மலைப்பாம்பை மீட்கும் பணியில் வனத்துறை, தீயணைப்புத்துறை
மலைப்பாம்பை மீட்கும் பணியில் வனத்துறை, தீயணைப்புத்துறை

இன்று காலை லாரியை எடுக்க ஓட்டுநர் முயன்ற போது, லாரியின் பின்புறம், பைப்புகளுக்குள், பாம்பு ஒன்று ஊர்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மலைப்பாம்பு போல் இருந்ததால், உடனடியாக தீயணைப்புத்துறைக்கு அவர் தகவல் அளித்தார். அங்கு வந்த தீயணைப்புத்துறையினரும் நீண்ட நேரம் போராடி பாம்பை மீட்க முடியாததால், மதுக்கரை வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு மலைப்பாம்பை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

மீட்பு பணி 5 மணி நேரமாக தொடர்வதால் பரபரப்பு
மீட்பு பணி 5 மணி நேரமாக தொடர்வதால் பரபரப்பு

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in