திமுகவுடன் கூட்டணியா? - கமல்ஹாசன் அளித்த 'நச்' பதில்!

திமுகவுடன் கூட்டணியா? - கமல்ஹாசன் அளித்த 'நச்' பதில்!

’’எல்லோருக்கும் தனிகட்சி உள்ளது, எங்களது நல்லெண்ணம் என்பது எங்கள் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளது. மனித நேயத்துடன் இது தொடரும்’’ என திமுகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் இவ்வாறு தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் உபகரணத்தை தனது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’இது என் பிறந்தநாள் என்பதை விட முக்கியமான ஒரு நல்ல நாள்; நல்லவர்கள் சேர்ந்து நடத்தும் நல்விழா; நாங்கள் எல்லாரும் மனிதர்கள், எங்களை மனிதம் தான் இங்கு ஒன்று சேர்த்துள்ளது.

காற்றின் ஈரப்பதத்தில் இருந்து நீரை தயாரிக்கும் இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரசாங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக உள்ளது’’ என்றார்.

அப்போது திமுகவுடன் கூட்டணியா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமல், ‘’அரசியல் கடந்து மனித நேயம் எங்களை இணைத்துள்ளது. எல்லோருக்கும் தனிகட்சி உள்ளது. அவர்களுக்கென விசுவாசம் உள்ளது. ஆனால் மனிதநேயம் முக்கியம் அதுதான் இணைத்துள்ளது. இந்த மனித நேயத்துடன் இது தொடரும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in