அதிரடி மாற்றம்... கைரேகை வைத்தால் இனி ரேஷனில் பொருட்கள் கிடைக்காது!

ரேஷன் கடை
ரேஷன் கடை

ரேஷன் கடைகளில்  இனி கருவிழி சரிபார்ப்பு முறை மூலம் பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பயோ மெட்ரிக்குடன், கண் கருவிழி பதிவு மூலம் பொருட்களை பெறும் நடைமுறை சென்னை  சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பெரம்பலூர் பகுதியில் முதலில்  தொடங்கப்பட்டது. இந்த நிலையில்  தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து, அதன் மூலமாக ரேஷன் பொருட்கள் பெற அரசாணை வெளியிடப்பட்டு, டெண்டர் விடப்பட்டிருக்கிறது. 

கருவிழி மூலம் பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, ஒயாசிஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடுதல், பாயின்ட் ஆப் சேல் கருவிகள் பராமரிப்பு போன்ற பணிகளை ஒயாசிஸ் என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. ஆனால், இதற்கான ஒப்பந்தம் முடிவடைந்துள்ள நிலையில், மறுபடியும் ஒயாசிஸ் நிறுவனத்திற்கே அனுமதி ஆணை வழங்கப்பட்டிருக்கிறது.

ரேஷன் கடையில் பொருட்களை வாங்கும் மக்கள்
ரேஷன் கடையில் பொருட்களை வாங்கும் மக்கள்

இப்படி டெண்டரும் முடிவாகியிருப்பதால், ரேஷனில் கருவிழி சரிபார்ப்பு திட்டம் விரைவில் ஆரம்பமாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், அமைச்சர் சக்கரபாணி சேலத்தில் நேற்று பேட்டி தந்துள்ளார், "பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் கடைகளில் பயோமெட்ரிக் முறை அடிக்க செயலிழந்து விடுகிறது. அதனால், பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன. எனவே, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்த 2 மாதத்திற்குள் 36 ஆயிரம் ரேஷன் கடைகளில், கருவிழிப்பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோகத் திட்டத்தை சீரமைத்து தமிழக மக்களுக்கு தரமான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in