அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு
டெங்கு

சென்னை பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த சிறுவன் சரவணன்(வயது 10) கடந்த 8ம் தேதி முதல் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளான்

சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் முதலில் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது சிறுவனுக்கு ரத்த அணுக்கள் குறைய துவக்கியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

சிறுவனுக்கு ரத்த அணுக்கள் குறைதல், ரத்தம் உறைதல் போன்ற டெங்கு அறிகுறிகள் இருந்ததால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in