பிப்ரவரி 29-ம் தேதி தான் இறுதி நாள்... வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி கறார் அறிவிப்பு!

அமைச்சர் சு.முத்துசாமி
அமைச்சர் சு.முத்துசாமி

வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெற பிப்ரவரி 29-ம் தேதி இறுதி நாளாகும். எனவே, மீண்டும் தேதி நீட்டிக்கப்பட மாட்டாது என்று வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு ஆட்சியர் அலுவலகம்
ஈரோடு ஆட்சியர் அலுவலகம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் திட்டத்தில் சிறு தானிய உணவுப் பொருட்கள் விற்பனையகத்தை வீட்டுவசதித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று திறந்து வைத்தார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " அத்திக்கடவு-அவினாசி திட்டம் பவானிசாகர் அணையின் உபரிநீரைக் கொண்டு செயல்படுத்த தயாராக உள்ளோம். இதற்காக 1045 குளங்களும் தண்ணீர் விட்டு சோதனை செய்து முடித்து விட்டோம். தண்ணீர் வந்தவுடன் அனைத்து குளத்திற்கும் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

வீட்டுமனை
வீட்டுமனை

கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன்பு வீட்டுமனை அங்கீகாரம் பெறாமல் அமைக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெற பிப்ரவரி 29-ம் தேதி இறுதி நாளாகும். மீண்டும் தேதி நீட்டிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் 60 இடங்களில் உள்ள வாடகைக் கட்டிடங்களில் 10 ஆயிரம் வீடுகள் மிக மோசமான நிலையில் இருந்ததை இடித்து தற்போது வீடுகள் கட்ட உள்ளோம்.

அந்த இடங்களில் தேவையான வீடுகள் குறித்து கணக்கெடுத்து கட்ட உள்ளோம். இதேபோல் தமிழகம் முழுவதும் செய்ய உள்ளோம். மேலும் உடுமலைப்பேட்டையில் 110 தனித்தனி வீடுகள் கட்டி விற்காமல் இடிந்துள்ளது. திட்டமிடாமல் அவசரத்தில் கட்டப்பட்டதால் தான் பல்வேறு வீடுகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...  


தேர்தல் அதிகாரியை தாக்கியதாக வழக்கு; மு.க.அழகிரி உள்ளிட்டோர் விடுதலை!

சிறுநீரில் இருந்து மின்சாரம்... மாத்தியோசித்த பாலக்காடு ஐஐடி மாணவர்கள்!

முன்னாள் பிரதமருக்கு திடீர் உடல் நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி!

கெட்டதிலும் ஒரு நல்லது... மகன் இறப்புக் குறித்து சூர்யாவிடம் உருகிய சைதை துரைசாமி!

விவசாயிகள் போராட்டத்தில் அதிர்ச்சி... மாரடைப்பால் ஒருவர் உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in