உடனே இதைச் செய்யுங்கள்... ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ரேஷன் அட்டை
ரேஷன் அட்டை

அன்னயோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் இலவசமாக பொருட்களை வாங்குகிறவர்கள் தங்கள்  ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் உடனடியாக இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கு  இலவசமாக அரிசி, கோதுமை ஆகியவை  வழங்கப்படுகிறது. சிலர் அவற்றை வாங்குவதில்லை. அதனால் அந்த பொருட்கள் ரேஷன் கடைக்காரர்கள் மூலமாக வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது.

இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக  இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறவர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குடும்ப அட்டை
குடும்ப அட்டை

அரசின் இந்த உத்தரவு செயல்படுத்தப்பட்டால் அரசுக்கு இந்த வகையில் ஏற்படும் இழப்பு சரி செய்யப்படும். இதனால் அரசுக்கு குறிப்பிட்ட அளவு நிதிச் சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!

ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!

அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!

சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in