சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!

இந்திய ராணுவ வீரர்கள்
இந்திய ராணுவ வீரர்கள்

ஜம்மு காஷ்மீரில் திடீரென சக வீரர்கள் மீது ராணுவ அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் இந்திய ராணுவ முகாம் ஒன்று உள்ளது. நேற்று காலையில் வழக்கம் போல் இந்த முகாமில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ராணுவத்தின் முக்கிய பணியில் இருக்கும் அதிகாரி ஒருவர், திடீரென துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட ஆரம்பித்தார். இதனால் சக வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அங்குமிங்கும் ஓடினர். திடீரென அவர் கையெறி குண்டுகளையும் தூக்கி வீச ஆரம்பித்தார். இதில் உயர் அதிகாரிகள் 3 பேரும், ராணுவ வீரர்கள் 5 பேரும் காயமடைந்துள்ளனர். பின்னர் ஒரு வழியாக அந்த அதிகாரியை சரணடைய செய்தார்கள்.

ஜம்மு காஷ்மீர் ராணுவம்
ஜம்மு காஷ்மீர் ராணுவம்

இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறும் போது, துப்பாக்கி சுடுதல் பயிற்சியின் போது அதிகாரி ஒருவர் திடீரென சக வீரர்கள் மீது கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்க ஆரம்பித்தார். இதனை கண்ட சக அதிகாரிகள் ஒருவழியாக அவரை சரணடைய செய்தார்கள். இந்த பதட்டமான சூழ்நிலை சுமார் 8 மணி நேரம் நீடித்தது என்று அவர் கூறினார். இதுகுறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in