மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!

2000 ரூபாய் தாள்
2000 ரூபாய் தாள்
Updated on
1 min read

மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.2000 நோட்டுகளை மாற்ற நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள்
வங்கிகள்

ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற செப்டம்பர் 30ம்தேதியுடன் முடிவு அடைவதாக எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான கால அவகாசத்தை நீட்டித்து ஆர்பிஐ உத்தரவிட்டது.

இந்த நிலையில் ரூ.2000 நோட்டுகளை மாற்ற அக்டோபர் 7ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதுவரை புழக்கத்தில் இருந்த ரூ 3.42 லட்சம் கோடி நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

96 சதவீதம் ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன. ரூ.14 ஆயிரம் மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் இதுவரை வங்கிகளுக்கு வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் ரூ.2000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நோட்டுகளை கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென திரும்ப பெறுவதாக அறிவித்தது.

2023ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும் அந்த நோட்டுகளை வைத்திருந்தால் அதை வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவித்தது. தொடர்ந்து இந்த ரூ.2000 நோட்டுகளை மக்கள் வங்கிகளில் மாற்றி வந்தனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 2ம் தேதி ரிசர்வ் வங்கி அறிக்கையை வெளியிட்டது. அதன்படி செப்டம்பர் 30ம் தேதி வரைக்கு வங்கிகளில் பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் 2000 ரூபாய் தாள்களை மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்தது.

இந்த நிலையில் ஆர்பிஐ எதிர்பார்த்த அளவிற்கு 2000 ரூபாய் தாள்கள் வராத நிலையில் கால அவகாசத்தை மேலும் 7 நாட்களுக்கு உயர்த்தியது. அதன்படி அக்டோபர் 7ம்தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது. நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in