மருத்துவம், பொறியல் மாத்திரமல்ல... இசை படிப்புக்கும் நிறைய வேலைவாய்ப்பு இருக்கு!

ஸ்ரீ அன்னை காமாட்சி மியூசிக் கல்லூரி
ஸ்ரீ அன்னை காமாட்சி மியூசிக் கல்லூரி

இசை படிப்புகள் குறித்து மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சவுமியா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஜெயலலிதா இசை கல்லூரி துணைவேந்தர் சவுமியா
தமிழ்நாடு ஜெயலலிதா இசை கல்லூரி துணைவேந்தர் சவுமியா

சென்னை கே.கே.நகரில் உள்ள ஸ்ரீ அன்னை காமாட்சி மியூசிக் கல்லூரி சார்பில் ஆண்டு தோறும் சித்திரமேளா ஒவிய கண்காட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 8-வது ஆண்டாக கடந்த ஒரு மாதமாக கல்லூரி வளாகத்தில் ’சித்திரமேளா 2024’ ஒவிய கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இதில் உலகம் முழுவதுமிருந்து பல்வேறு ஒவியர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை காட்சிபடுத்தி உள்ளனர். இவர்களின் மூன்று வயது சிறுவர்களும் இருக்கிறார்கள். ஓவிய கண்காட்சியை தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.சௌமியா இன்று பார்வையிட்டு சிறந்த ஓவியங்களை வரைந்த ஓவியர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

தமிழ்நாடு ஜெயலலிதா இசை கல்லூரி துணை வேந்தர் துணைவேந்தர் சவுமியா
தமிழ்நாடு ஜெயலலிதா இசை கல்லூரி துணை வேந்தர் துணைவேந்தர் சவுமியா

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை வேந்தர் சவுமியா, “உலகம் முழுவதும் ஒவியக்கலையின் சிறப்பினைப் பரப்பவே இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. ஒவியக்கலையைக் கற்றுக்கொள்வதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் பெறலாம். மருத்துவம், பொறியியல் படித்தால் மட்டும் தான் வேலை கிடைக்கும் என்பதில்லை... மியூசிக் கல்லூரியிலும் படித்து திறமையை வளர்த்துக் கொண்டால் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால், மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இசைப் படிப்புகள் குறித்து போதுமான புரிதல் இல்லை. இது தொடர்பாக பல்கலைக் கழகம் சார்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...  


இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in