நிர்மலா சீதாராமனிடம் இல்லாத பணம் தமிழிசையிடம் இருக்கிறதா... செல்வப்பெருந்தகை கேள்வி!

காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

நிர்மலா சீதாராமனிடம் தேர்தலில் போட்டியிட பணமில்லை என்றால் தமிழிசை மற்றும் எல்.முருகனிடம் அதிக பணம் உள்ளதா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

தீரன் சத்தியமூர்த்தி
தீரன் சத்தியமூர்த்தி

சென்னை சத்தியமூர்த்தி பவனில், தீரர் சத்தியமூர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ”தேர்தலில் போட்டியிட பணமில்லை என நிர்மலா சீதாராமன் சொல்கிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை விட, தமிழிசை மற்றும் எல்.முருகனிடம் அதிக பணம் உள்ளதா? வெயிலில் சுத்தாமல் எந்தவித சிரமமும் இல்லாமல் ஆட்சி அதிகாரத்தை அனுபவிப்பதற்கு நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் ஆசைப்படுகிறார்கள்.

தேர்தல் சின்னங்கள்
தேர்தல் சின்னங்கள்

கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் பிரதமர் சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் வரும் என்பது தெரிந்து தான் பிரதமர் அத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார். தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் அமைப்புகளை நம்பியே உள்ளார் மோடி. நாங்கள் மக்களை நம்பி உள்ளோம்.

மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத திருநாவுக்கரசருக்கு இதை விட நல்ல பதவி கிடைக்கும். திருநெல்வேலியில் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்த காங்கிரஸ் முன்னாள் எம்பி-யான ராமசுப்பு தொலைபேசி வாயிலாக பேசிய பின் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார்” என்றார்.

ஜி.கே.வாசன் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, ”கை சின்னம் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது ஜி.கே.வாசனின் உள் மனது ஆசை. காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தைத்தான் ஜி.கே.வாசன் அப்படி வெளிப்படுத்தியுள்ளார்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in