குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு குழந்தை! 21 ஆண்டுகளுக்கு மாதம் 10 ஆயிரம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

உயர் நீதிமன்ற மதுரை கிளை.
உயர் நீதிமன்ற மதுரை கிளை.

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணிற்கு மீண்டும் குழந்தை பிறந்த விவகாரம். குழந்தையின் 21 வயது வரை மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்தவர் சந்திர ராக்கு. இவருக்கு காசி விஸ்வநாதன் என்பவருடன் கடந்த 2007ம் ஆண்டு திருமணமான நிலையில், 3 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தையும் உள்ளனர்.

இதையடுத்து, கடந்த 2014ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டார். ஆனால், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மருத்துவர் முறையாக மேற்கொள்ளாமல் விட்டுள்ளார். இதன் காரணமாக ராக்கு மீண்டும் கருத்தரித்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக குழந்தையை கருவிலேயே கலைக்க ராக்குவும், காசி விஸ்வநாதனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால், நீதிமன்றம் குழந்தையை கலைக்க வேண்டாம் என்று கூறியதோடு, குழந்தையின் பராமரிப்புக்கு தேவையான உதவிகளை நீதிமன்றமே செய்து தரும் என தெரிவித்திருந்தது. இதையடுத்து, ராக்குவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தனது குழந்தையை வளர்க்க சிரமப்படுவதாகவும், நீதிமன்றம் கூறியது போல், தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, ஏற்கெனவே இது போன்ற இரு வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மனுதாரருக்கும் பொருந்தும். எனவே, அவருக்கு அரசு சாா்பில் ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே மனுதாரருக்கு அரசாணைப்படி ரூ.30 ஆயிரம் வழங்கியிருப்பதால், மீதமுள்ள இழப்பீட்டு தொகை ரூ. 2.70 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், ஐந்தாவதாக பிறந்த குழந்தைக்கு அரசு அல்லது தனியார் பள்ளியில் இலவசக் கல்வி பெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்ய வேண்டும். அந்தக் குழந்தைக்கு 21 வயது நிறைவடையும் வரை ஆண்டுக்கு தலா ரூ.1.20 லட்சத்தை அதாவது மாதம் ரூ.10 ஆயிரம் என்ற வீதம் அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில்  பாதுகாப்பு படை வீரர் காயம்!

திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!

வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in