உலகக் கோப்பை கிரிக்கெட்... ஆஸ்திரேலியாவுக்கு 312 ரன் இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா !

பேட் கம்மின்ஸ், டெம்ப பவுமா
பேட் கம்மின்ஸ், டெம்ப பவுமா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 312 ரன் இலக்காக நிர்ணயித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்று வரும் 10வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச தீர்மானித்தது.

இதையடுத்து, களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 50 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன் எடுத்தது. அதிபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் குவிண்டன் டிகாக் 109 ரன்னும், மர்க்ரம் 56 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் மிட்சல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in