இடது பக்கம் அண்ணாமலை... நடுவில் முதல்வர் விஜய்யாம்... வலது பக்கம் டிடிவி; ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர்

செய்தித்தாள் வடிவில் போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்...
செய்தித்தாள் வடிவில் போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்...

விஜய் முதல்வராக பதவியேற்பதாக ஆரூடம் சொல்லும்படியான போஸ்டரை ரசிகர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் ‘லியோ’ படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கான வேலைகள் மும்முரமாக ஒரு புறம் நடைபெற்று வர, மற்றொரு புறம் விஜய் அரசியலுக்கு தயாராகி வருவதாக, அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசியலுக்கு ஆயத்தமாகும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை தனது மக்கள் இயக்கத்தின் மூலம் செய்து வருகிறார் விஜய்.

’லியோ’ விஜய்
’லியோ’ விஜய்

இந்நிலையில் செய்தித்தாள் வடிவில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் விஜய் தலைமையில் டி.டி.வி., தினகரன், அன்புமணி ராமதாஸ், ஓ.பி.எஸ், அண்ணாமலை, ஜான்பாண்டியன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் எடிட் செய்தி புகைப்படமாக போட்டுள்ளனர்.

அதேபோல் பிரதமர் மோடி தேர்தலில் விஜய் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும். பதவி ஏற்புவிழாவில் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்து போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். தங்களது கனவை வெளிப்படுத்தும் விதமாக ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in