காமதேனு
பாலிவுட்டில் ‘ஜவான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை நயன்தாரா கிளாமர் ரூட்டில் மீண்டும் குதித்துள்ளார்.
நடிப்பு, குழந்தைகள், குடும்பம், படங்கள் தயாரிப்பு என பிஸியாக இருக்கும் நயன்தாரா பிசினஸிலும் இப்போது தீவிரம் காட்டி வருகிறார்.
அதன்படி டீ பிசினஸ், லிப் பாம், உணவு என பலதுறைகளில் முதலீடு செய்துள்ளார்.
இதன் அடுத்தக்கட்டமாக, ’9ஸ்கின்’ என சரும பராமரிப்பு க்ரீம் பிசினஸிலும் மலேசிய தொழிலதிபரோடு கைக்கோத்துள்ளார் நயன்தாரா.
இந்த ‘9ஸ்கின்’ பிராண்டிற்காக தற்போது முன்னணி மேகசின் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார் நயன்தாரா.
இதற்காக எடுத்துள்ள புகைப்படங்களில் தாராளமாக கிளாமரில் குதித்துள்ளார் நயன்தாரா. ‘பில்லா’ படத்திற்குப் பிறகு பெரிதாக கிளாமர் காட்டாமல் நடித்து வந்த நயன், இப்போது மீண்டும் கிளாமரில் கலக்கி இருக்கிறார்.